வெங்கட்பிரபுவின் கவனம் ஐ பட நாயகி: நயன்தாராவை பீதி அடைய வைத்த எமிஜாக்சன்!!!

13th of May 2014
சென்னை::லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்து மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே படத்திற்கு பூஜை போடப்பட்டு விட்ட நிலையில், அப்படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தனர். அப்போது, விவரம் அறிந்த நயன்தாரா, தானே தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்க, தேடிவந்தவரை விட வேண்டாம் என்று அவரை கமிட் பண்ணி விட்டனர். இதனால் முதலில் அஜீத், அதையடுத்து ஆர்யா, பின்னர் ஜெமய்ரவி, சிம்பு இப்போது சூர்யா என தனது இரண்டாவது ரவுண்ட் ஹீரோக்களை பட்டியல் போட்ட நயன்தாரா, எனது அடுத்த எயிம் விஜய் என்று சொல்லிக்கொண்டே அப்படத்தில் நடிக்க கால்சீட்களை தாராளமாக வாரி வழங்கினார்.
 
ஏற்கனவே சூர்யாவுடன் அவர் நடித்த கஜினி மெகா ஹிட் என்பதோடு, அதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஆதவனும் கமர்சியல் ஹிட் படம்தான் என்பது நயன்தாராவுக்கு ப்ளசானது. அதனால், அதையடுத்து இன்னொரு நாயகியாக யாரேனும் புதுமுக நடிகையை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலித்து வந்த வெங்கட்பிரபுவின் கவனம் ஐ பட நாயகி எமிஜாக்சனின் மேல் விழுந்தது.
 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்த நடிகையாச்சே, கரன்சியை கன்னாபின்னா என்று கேட்பாரோ என்று தடுமாறிக்கொண்டு நின்றவர்கள், அதையும்தான் கேட்டுப்பார்த்து விடுவோமே என்று எமியை தொடர்பு கொண்டு பேசினார்களாம். அவரோ, சூர்யா கதாநாயகன் என்றதும், ஒன்னும் பிரச்னை இல்லை. என் பெயரையும் சேர்த்துக்குங்க படக்கூலியை முன்னபின்ன பாத்து பேசிக்கலாம் என்று இழுத்தடிக்காமல் சைலன்டாக சைன் பண்ணி விட்டாராம். இதனால் சூர்யாவும், வெங்கட்பிரபுவும் நினைத்ததை விட இரண்டு முன்னணி கதாநாயகிகள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
 
ஆனால், ஆரம்பத்தில் இன்னொரு நடிகை புதுமுகம்தான் என்று சொன்னதால் தைரியமாக இருந்த நயன்தாராவுக்கு, இப்போது ஐ பட நாயகி எமிஜாக்சன் இன்னொரு நாயகி என்பதால், ஹாலிவுட் நடிகை என்பதால் அவரது கேரக்டரை பெருசுபடுத்தி ஒருவேளை தன்னை டம்மி பண்ணி விடுவார்களோ என்று உள்ளூர பீதியில் இருக்கிறாராம்..

Comments