விக்ரம் பிரபுவுக்கு ஜோடி பாலிவுட் நாயகி?!!!

26th of May 2014
சென்னை::
கும்கி, இவன் வேற மாதிரி போன்ற படங்களில் நடித்திருப்பவர் விக்ரம் பிரபு.
இவைதவிர அரிமா நம்பி, சிகரம் தோடு, தலப்பாகட்டி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். விரைவிலேயே ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்திலும் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் கதை இந்திய எல்லையில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் விக்ரம் பிரபு எல்லை பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஏற்ற ஜோடியை தேடி வருகின்றனர்.

சமீபத்தில், இந்தப் படத்திற்காக மும்பை சென்ற இயக்குனர் குமரவேலன் பாலிவுட் நடிகை ஆலியாபட்டை சந்தித்து, கதையின் அவுட்லைனை சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அவுட்லைன் ஆலியாபட்டிற்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தப் படத்தை பிரபல திரைப்பட ஃபைனான்சியரும், தயாரிப்பாளருமான செயின் ராஜ் ஜெயின் தயாரிக்கிறார்....

Comments