நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா!!!

 7th of May 2014
சென்னை::அஜித்தின் 55-வது படத்தை சில தினங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தார் கெளதம்மேனன்.
 
இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்காவை கமிட் செய்தார்கள். படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்பதால் அந்தக் கேரக்டரில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த விஷயத்தில் கௌதம் மேனனே மிகவும் குழப்பமாக இருந்தார்.
 
முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு எமி பேசப்பட்டார், பின்பு த்ரிஷா தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கடைசியாக வந்த தகவலின் படி த்ரிஷாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கெனவே அஜித்துடன் ‘ஜி’, ‘கிரீடம்’, ’மங்காத்தா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
இது இருவரும் ஜோடி சேரும் நான்காவது படம். த்ரிஷா தமிழில் அறிமுகமாகி 12 ஆண்டுகளைக் கடந்தும் இப்போதும் கதாநாயகியாக நீடிக்கிறார். தமிழ்த் திரைப்பட உலகில் புதுப்புது கதாநாயகிகள் வந்தும் த்ரிஷாவுக்கான வாய்ப்புகள் அப்படியே இருக்கிறது...
 

Comments