சென்னை::ஸ்டார் விஜய் விருதுகள் என்ற பெயரில் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு
ஆண்டு தோறும் விருது வழங்கி வரும் விஜய் டிவி, தற்பொது சின்னத்திரை
நட்சத்திரங்களை கெளரவிக்கும் விதத்தில் 'விஜய் டிவி டெலி விருதுகள்' என்ற
பெயரில் தொலைகாட்சி நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்க முடிவு
செய்துள்ளது.
விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும், வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கும் இதில் விருது வழங்கப்பட உள்ளது.
வரும் மே 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் நேயர்கள் தங்களின் அபிமான நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்வு செய்யும் விரும்பும் நேயர்கள், 57827 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். மேலும் விஜய்டிவி.காம் என்ற இணையதளத்திலும் வாக்குகளை செலுத்தலாம்.

Comments
Post a Comment