நடிகர் சந்தானம் மீதான புகார்: கமிஷனருடன் பாக்யராஜ் சந்திப்பு!!!

 27th of May 2014
சென்னை:கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட விவகாரம் தொடர்பான புகார் குறித்து சென்னை காவல் ஆணையரை நடிகர் பாக்யராஜ் சந்தித்து பேசினார்.
 
இன்று போய் நாளை வா’ என்ற திரைப்படத்தின் கதை உரிமை என்னிடம் இருக்கும்போது அதே கதையை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் என்னை கேட்காமல் பயன்படுத்தியுள்ளனர். நடிகர் சந்தானம் உள்பட 3 பேர் சேர்ந்து இதில் மோசடி செய்துள்ளனர் என்று கூறி நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
 
இந்த புகார் குறித்த விசாரணைக்காக கமிஷனர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை பாக்யராஜ் வந்தார். கமிஷனர் ஜார்ஜை சந்தித்து தனது புகார் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்...

Comments