28th of May 2014
சென்னை::ரஜினியின் இளவயது நட்பு படமாகிறது. இதில் ரஜினியின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நடிகராவதற்கு முன் பெங்களூரில் பஸ் கண்டக்டராக ரஜினி பணிபுரிந்தபோது அதே பஸ்சில் டிரைவராக இருந்தவர் ராஜ் பகதூர். ரஜினியின் நடிப்பு ஆர்வம் கண்டு அவரை நடிப்பு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவியவர். சூப்பர் ஸ்டார் ஆனபிறகும் ராஜ் பகதூருடன் ரஜினி நெருக்கமான நட்புடன் இருக்கிறார்.
இவர்களின் நட்பு தற்போது ‘ஒரு வழி சாலை என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் படமாக உருவாகிறது. இதில் முக்கிய வேடத்தில் ராஜ் பகதூர் நடிக்கிறார். ருஷி டைரக்டு செய்கிறார்.இது பற்றி ராஜ்பகதூர் கூறியது: இக்கதை ரஜினியுடன் எனக்கிருந்த நட்பை மையமாக வைத்து உருவாகிறது. நாடகங்களில் நாங்கள் நடித்திருக்கிறோம். எங்கள் நட்பு எப்படி உருவானது. இன்றைக்கும் அது எப்படி குறையாமல் இருக்கிறது. இதில் ரஜினி வேடத்தில் நடிக்கப்போவது யார் என்பது ரகசியம். தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும்போதுதான் அது ரசிகர்களுக்கு தெரியும்.
ரஜினியின் புகழை வைத்து சம்பாதிப்பதற்காக இப்படத்தை எடுக்கவில்லை மாறாக சமூகத்துக்கு இதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல முற்படுகிறோம். இது பற்றி கூறி ரஜினியிடம் அனுமதி கேட்டபோது உடனடியாக சம்மதம் தந்தார். படம் உருவாகி முடிந்ததும் என்னுடன் அமர்ந்து படம் பார்ப்பதாக தெரிவித்தார்.இவ்வாறு ராஜ் பகதூர் கூறினார்...
Comments
Post a Comment