விக்ரம் நடித்த சாமி படத்திலிருந்து டைரக்டர் ஹரியின் சினிமா செண்டிமென்ட்!!!

21st of May 2014
சென்னை::விக்ரம் நடித்த சாமி படத்திலிருந்து ஆக்சன் கதைகளை இயக்கத் தொடங்கிய ஹரி, ஐயா, தாமிரபரணி, ஆறு, வேல், வேங்கை, சிங்கம், சிங்கம்-2 என்று இப்போது வரை அனல் பறக்கும் ஆக்சன் படங்களாக இயக்கிக்கொண்டிருக்கிறார். தற்போதுகூட விஷாலைக்கொண்டு பூஜை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் அவரது வழக்கமான ஆக்சன் பாணியிலேயே தயாராகிறது.
 
ஆக, சிங்கம் படத்தில் சூர்யா நடித்தது போன்று இந்த படத்தில் விஷாலும் சமூகவிரோதிகளை அழிக்கும் ஆவேசமான ரோலில்தான் நடிக்கிறாராம். அதோடு, இதற்கு முன்பு தூத்துக்குடி பகுதிகளை கதைக்களமாகக் கொண்டு இயக்கி வந்த ஹரி, இந்த முறை கோவையை மையமாகக்கொண்ட கதையை இயக்குகிறார்.
 
மேலும், தான் எந்த ஏரியா கதையை படமாக்கினாலும், அந்தந்த ஏரியாக்களிலேயே முக்கிய காட்சிகளை பெரும்பாலும் படமாக்குவதை தனது செண்டிமென்டாக கடைபிடித்து வரும் ஹரி, இந்த பூஜை படத்தை கோயமுத்தூர் பகுதியில் முகாமிட்டு படமாக்கிக்கொண்டிருக்கிறார். இதற்காக விஷால் ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட படத்தில் நடிக்கும் அத்தனை கலைஞர்களும் கோவையில் தங்கியிருந்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
படத்தின் பெரும்பகுதியை கோவையிலேயே படமாக்கியபோதும், ரசிகர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக சில லொகேசன்களை காட்ட வேண்டும் என்பதற்காக, இரண்டு பாடல் காட்சிகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்கு பயணிக்கிறாராம் ஹரி...

Comments