25th of May 2014
சென்னை::பருத்திவீரன் படத்தில் அறிமுகமானவர் கார்த்தி. அதையடுத்து அவர் நடித்த நான் மகான் அல்ல, பையா உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்றபோதும், பல படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன. அதிலும் சிறுத்தைக்குப் பிறகு நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய படங்களின் தோல்வி கார்த்தியை தடுமாற வைத்து விட்டன.
இதனால் அதற்கு முன்பு வரை அவரது படங்களின் வெற்றி காரணமாக உற்சாகமாக செயல்பட்டு வந்த அவரது ரசிகர் மன்றங்கள் சமீபகாலமாய் உற்சாகமிழந்து காணப்படுகிறார்கள். கூடவே விஜய், அஜீத் படங்களின் தொடர் வெற்றியால், அவர்களது ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டம் கார்த்தி ரசிகர்களை இன்னும் வெறுப்பேற்றியது.
இருப்பினும், கார்த்தியைப்போலவே, அடுத்து நடிக்கும் படங்கள் வெற்றியை கொடுக்கும் என்று காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இன்று தனது பிறந்த நாள் என்பதால், மீண்டும் ரசிகர் மன்றங்களுக்கு எனர்ஜி கொடுக்கும் வகையில் அவர்களை தட்டி எழுப்பியிருக்கிறார் கார்த்தி. நலத்திட்ட உதவி, அன்னதானம் என அவர்களை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் தமிழகத்திலுள்ள கார்த்தியின் அனைத்து ரசிகர் மன்றங்கள் சார்பிலும் ஆங்காங்கே ரத்த தான முகாம்களும் இன்று நடைபெறுகிறதாம்.....

Comments
Post a Comment