சென்னை::மலையாளத்தில் சாசனம் எழுதிக்கொடுத்ததுபோல போலீஸ் அதிகாரி கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர் சுரேஷ்கோபி மட்டுமே. நம்ம ஊர் சினிமாவில் கேப்டன் மாதிரி. இப்போது அவருக்கு அடுத்தபடியாக அதிகமான படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் போடுவது பிருத்விராஜ்தான்.
அதற்கேற்ற மாதிரி இவருக்கும் போலீஸ் கேரக்டர் கச்சிதமாக பொருந்துகிறது. இல்லையென்றால் 13 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்க முடியுமா? கடந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ப்ருத்விராஜ்.
இப்போது அவருக்கு போட்டியாக உருவெடுக்கும் வகையில் அவரது சகோதரரான இந்திரஜித்தும் அடிக்கடி போலீஸ் வேடங்களில் நடித்துவருகிறார். கடந்த வருடங்களில் ‘சேகவர்’, ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ படங்களில் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்த இந்திரஜித் சமீபத்தில் வெளியான ‘மசாலா ரிபப்ளிக்’ படத்தில் எஸ்.ஐ சாம்புவாக நடித்திருந்தார்.
இப்போது மீண்டும் ‘ஏஞ்சல்ஸ்’ என்ற படத்தில் ஹமீம் ஹைதர் என்கிற உதவி போலீஸ் கமிஷனராக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவருகிறது...
Comments
Post a Comment