26th of May 2014
சென்னை::புதிய முயற்சியில் ஒரு படம் வருகிறதென்றால் அதை பார்த்துவிட்டு அப்புறம் விமர்சனம் செய்வதுதான் சினிமா தர்மம்.. ஆனால் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதைப்பற்றி ஏளனம் செய்த வீணர்கள் இப்போது படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் காணாமல் போய்விட்டார்கள்.

சாதாரணமாக இரண்டு படங்களில் நடித்துவிட்டுப்போக கூடிய நிலையில், ரஜினி ஒரு படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டு நடிக்கிறார் என்றால் அது தன் மகள் இயக்கும் படம் என்பதற்காக மட்டும் அல்ல.. தமிழ்சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்லும் மகளின் புதிய முயற்சிக்கு ஊக்கம் தருவதற்காகத்தான். அதுதான் இப்போது சாதனையாக முடிந்திருக்கிறது.
புதிய முயற்சிகளின் நாயகன் என்று சொல்லப்படுகிற நம் உலகநாயகன் இந்தப்படத்தை பார்த்து பாராட்டுவதுதானே பொருத்தமாக இருக்கும். நேற்று கமலுக்காக ‘கோச்சடையான்’ சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படம் பார்த்த கமல் புதிய தொழில்நுட்பத்தில் ரஜினியின் உழைப்பை பார்த்து சௌந்தர்யாவிடம் மனமாற பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.
நன்றாக கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.. கமல் முன்னெடுத்து செய்ய நினைத்த விஷயங்களை எல்லாம் அவரது நண்பரான ரஜினி செய்து வருகிறார். ரோபாவாக நடிக்க கமல் பல வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டார். ஆனால் அதை எந்திரனாக சாதித்தது ரஜினி தான்.. ‘மருதநாயகம்’ என்கிற வரலாற்று படத்தை எடுக்க நினைத்தார் கமல்.. இன்று அதிலும் ரஜினி முந்திக்கொண்டார். ஆனால் இவையெல்லாம் போட்டிக்காக செய்யப்பட்டவை அல்ல.. ஏதேச்சையாக ரஜினிக்கு அமைந்தவைதான்.....
Comments
Post a Comment