மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தை நேரில் சந்தித்தார் விஜய்!!!

25th of May 2014
சென்னை::சமீபத்தில் காஷ்மீரில் தீவீரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலின்போது விரமரணம் அடைந்தவர் சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன். அவரது மரணத்துக்கு நாடே அஞ்சலி செலுத்தியதுடன் உரிய ராணுவ மரியாதையுடன் சென்னையிலேயே அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், முகுந்த் வரதராஜன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தனது ஆறுதலை தெரிவித்துக்கொண்டார். மேலும் கொஞ்சநேரம் ஒதுக்கி முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் சிறுகுழந்தையைப்போல் விளையாடி அவளை மகிழ்வித்தாராம்.
ஏற்கனவே துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது....

Comments