12th of May 2014
சென்னை::தமிழிலிருந்து வந்த வாய்ப்புகளை மறுத்து வந்த சோனாக்ஷிக்கு கோலிவுட் மீது பாசம் வந்துள்ளது.தமிழில் கமல்ஹாசன் இயக்கிய ‘விஸ்வரூபம்‘ முதல் பாகத்திலேயே ஹீரோயினாக நடிக்க சோனாக்ஷி சின்ஹாவை அழைத்திருந்தார் கமல்ஹாசன். அப்போது அவருக்கு உடல் இளைப்பதற்கு 2 மாதம் அவகாசம் தரப்பட்டது.

ஆனால் சோனாக்ஷி உடல் இளைக்கவில்லை. மேலும், கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது என்றார். இதற்கிடையில் அவர் கால்ஷீட் கொடுத்த தேதிகளை கமல்ஹாசன் வீணடித்தார். இதனால் படத்திலிருந்து சோனாக்ஷி விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக பூஜா குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதலில் வந்த கோலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த சோனாக்ஷிக்கு மீண்டும் ரஜினியின் ‘லிங்கா‘ படத்தில் நடிக்க வாய்ப்பு அவரது வீட்டு கதவை தட்டியது.
ஆரம்பத்தில் முரண்டுபிடித்த சோனாக்ஷி பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக உடல் இளைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இம்முறை சோனாக்ஷி உடல் இளைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார். சமீபத்தில் மைசூரில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றதுடன் ‘லிங்கா முதல்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்ற அனுபவம் அழகானது. அற்புதமான பட குழு. ஷூட்டிங்கில் இருந்தபோதும் வீட்டில் இருந்ததுபோன்ற ஒரு சூழல் அமைத்து தந்தனர்‘ என்று கோலிவுட் மீது பாசமழை பொழிந்திருக்கிறார் சோனாக்ஷி..
Comments
Post a Comment