30th of May 2014
சென்னை::'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வித்யா பாலன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் 'பாபி ஜாசூஸ்'. சமர் ஷைக் இயக்கியுள்ள இப்படத்தில் அலி ஃபாசலும், வித்யா பாலனும் நடித்துள்ளனர்.
கவர்ச்சி நடிகை, கர்ப்பிணி என்று வித்தியாசமான வேடங்களை விரும்பி ஏற்று தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இன்னும் புதுப்புது முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்.
'பாபி ஜாசூஸ்' படத்தில் துப்பறியும் நிபுணராக அதிரடி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். அதற்காக 122 கெட்டப்புகளைப் போட்டுப் பார்த்து அதில் 12 கெட்டப்புகளை ஓ.கே செய்து படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
12 கெட்டப்புகளைத் தேர்வு செய்வதற்காக தினமும் நான்கைந்து கெட்டப்புகளில் வித்யா பாலன் தெருக்களில் நடப்பாராம். இதில் எது பொருத்தமாக இருக்கிறது என்று பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தார்களாம்.
இந்த செலக்ஷனுக்காக ரொம்பவே பொறுமையோடு இருந்திருக்கிறார் வித்யா பாலன்.
வித்யா பாலன் ஆசிரியை, பிச்சைக்காரன், மீனவப் பெண் என 12 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 4ல் ரிலீஸ் ஆகிறது.
Comments
Post a Comment