ஹேப்பி பர்த்டே விஜய் வசந்த்!!!

20th of May 2014
சென்னை::
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் விஜய் வசந்த்.  மிகப்பிரபலமானவரான வசந்த் அன் கோ வசந்தகுமாரின் மகன். பின்னர் சமுத்திரகனி இயக்கத்தில் ச்சிகுமாரின் நண்பனாக இவர் நடித்த ‘நாடோடிகள்’ ரசிகர்கள் மத்தியில் இவரை தெளிவாக  தெளிவாக அடையாளம் காட்டியது.
 
வெங்கட்பிரபுவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான இவர் ‘சரோஜா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ என அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் வந்துபோகும் உரிமையை பெற்றவர். சமீபத்தில் இவர் தனி ஹீரோவாக நடித்த ‘என்னமோ நடக்குது’ படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் அள்ளிக்கொடுத்து, இவருக்கு கதாநாயகனாக புரமோஷன் வழங்கியிருக்கிறது.
 
ஆக, தற்போது வெற்றிப்படிகளில் ஏற ஆரம்பித்திருக்கிறார் விஜய் வசந்த். இன்று பிறந்தநாள் காணும் விஜய் வசந்த்துக்கு நமது  poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது....
.

Comments