13th of May 2014
சென்னை::ஆர்யாவை தொடர்ந்து ஜெய்யும் தயாரிப்பாளராக களமிறங்க இருக்கிறார்.
பகவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜெய்.
அந்தப் படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார். தொடர்ந்து, சென்னை –
600 028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி
உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக,
சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் ஜெய்க்கு
திருப்புமுனையாக அமைந்தன.
விரைவில் ஜெய் நடிப்பில் வடகறி, திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்கள்
ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இதுதவிர எங்கேயும் எப்போதும் சரவணன இயக்கும்
பெயரிடப்படாத ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில்
அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
Comments
Post a Comment