பேசுங்க அனுஷ்கா.. நல்லா இருக்கும்” – கௌதம் மேனன் வேண்டுகோள்!!!

29th of May 2014
சென்னை::அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத தங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படு மும்முரமாக இருக்கிறது கௌதம் மேனனின் படக்குழு. சமீபத்தில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் அஜித் நடித்த சில காட்சிகளை படமாக்கினார்கள்.
 
இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று தெரிகிறது.
 
அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து இந்தப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் முற்ரிலும் வித்தியாசமாக இருக்குமாம்.
 
இதனால் அதன் தனித்தன்மையை இன்னும் கூடுதலாக மெருகேற்றும் வகையில் அனுஷ்காவையே சொந்தக்குரலில் டப்பிங் பேசும்படி சொல்லியிருக்கிறாராம் கௌதம் மேன்ன். அந்த வகையில் அனுஷ்கா தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments