அமெரிக்காவில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் மர்ம மனிதர்கள் தாக்குதல்!!!

21st of May 2014
சென்னை::பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்கா வீட்டில் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இது குறித்து புகைப்படத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான், டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். 'ஸ்லம் டாக் மில்லினர்' என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருது வென்ற ரஹ்மான், உலக அளவில் அறியப்பட்ட இசையமைப்பாளரானார்.

தற்போது இந்திய மொழிப் படங்களுடன், ஏராளமான ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வருவதால், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு ஒன்றை வாங்கினார். ரஹ்மான் எப்போது அமெரிக்கா போனாலும், இந்த வீட்டில் தான் தங்குவார்.

தற்போது, 'மில்லியன் டாலர் ஆர்ம்' என்ற ஹாலிவுட் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
 

Comments