4th of May 2014
சென்னை::சூப்பர்ஸ்டார் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் பூஜை நேற்று மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்றது. படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கி மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் நடைபெறுகிறது. இந்தப்படத்தின் பூஜையில் கலந்துகொண்ட ரஜினியின் கெட்டப்பும் ஹேர்ஸ்டைலும் வித்தியாசமாக இருந்தது.
பொதுவாக ரஜினி விக் வைத்துதான் நடிக்கிறார் என்றாலும் தனது பழைய ஹேர்ஸ்டைலில் இருந்து மாறிவிடாமல் பார்த்துக்கொள்வார். ஆனால் இந்தப்படத்தில் மாறியுள்ள அவரது ஹேர்ஸ்டைல் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக “நெற்றியின் ஓரத்தில் முடி சுருண்டு விழுவது சூப்பர். நிச்சயமாக இது புதிய ட்ரெண்டை ஆரம்பித்துவைக்கும்..” என்கிறார்கள் ரசிகர்கள்....
Comments
Post a Comment