காமெடி வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பரோட்டா சூரிக்கு அதிர்ச்சி கொடுத்த சந்தானம்!!!

20th of May 2014
சென்னை::
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகுதான் வருடத்துக்கு நான்கு படத்தில் நடிக்கிறேனா இல்லை ஒரு படத்தில் நடிக்கிறேனா என்பது தெரியும் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சந்தானம். அவரிடத்தில் இப்போது ஒரு படமா? நான்கு படமா? என்று கேட்டால், ஒரேயொரு படம்தான் என்கிறார்.
 
காரணம், நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் வேண்டும். அப்படி கிடைக்கிறபோது மட்டுமே நாயகனாக நடிப்பேன். இன்றைய தருவாயில் கதைகள் ரொம்ப முக்கியம். வெற்றியை தீர்மானிப்பதே கதைதான் என்பதால், அந்த வெற்றி பெறுவதற்கான அம்சங்களை கொண்ட கதைகளை கண்டு பிடிப்பதே பெரிய விசயமாக உள்ளது.
 
அதனால்தான் வருடத்துக்கு ஒரு படம் என்ற பாலிஸிக்கு வந்து விட்டேன். அதுவும் பிடித்தமான கதைகள் கிடைத்தால் மட்டுமே, இல்லையேல் காமெடி வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறும் சந்தானம், தனது நட்பு வட்டார ஹீரோக்களான ஆர்யா, ஜீவா, கார்த்தி, உதயநிதி உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையே எந்திரன் படத்தையடுத்து ரஜினியின் லிங்கா படத்திலும் அவரை நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.
 
ஆக, மார்க்கெட்டில் தனக்கு போட்டியாக இருந்த சந்தானம் ஹீரோவாகி விட்டார். இனிமேல் நாம்தான் நம்பர்-ஒன் காமெடியன் என்று கோடம்பாக்கத்தில் மார்தட்டிக்கொண்டு திரிந்த சூரிக்கு, சந்தானத்தின் இந்த திடீர் முடிவு பெரும அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், அடுத்தபடியாக சந்தானத்தின் நட்பு வட்டார ஹீரோக்களின் படங்களை கைப்பற்ற பேச்சுவார்த்தையில் இருந்த சூரி, தனது நட்பு வட்டாரமான விமல், சிவகார்த்திகேயன், விதர்த் போன்ற நடிகர்களின் படங்களையாவது தக்க வைத்துக்கொள்வோம் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்...

Comments