பிசாசு’வுடன் கூட்டணி வைக்கும் அறிமுகங்கள்!!!

16th of May 2014
சென்னை::பாலா தயாரிக்க, தான் இயக்கும் “பிசாசு” படத்தில் ஏகப்பட்ட புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர் மிஷ்கின்.’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் ரமேஷின் தம்பி இந்தப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அருண் என்பவர் இசையமப்பாளராகவும் ஜெயஸ்ரீ ஆர்ட் டைரக்டராகவும் அறிமுகமாகிறார்கள்.
 
பி.சி.ஸ்ரீராமின் குருகுலத்தில் பயின்ற ரவிராய் தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர். இதுதவிர தமிழ் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவரான தமிழச்சி தங்கபாண்டியன் இந்தப்படத்தில் பாடல் எழுதுகிறார்..

Comments