கோச்சடையான் - ரஜினிக்கு டூப் போட்ட லொள்ளு சபா ஜீவா!!!

31st of May 2014
சென்னை:கோச்சடையான் படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போதே அரசல் புரசலாக இதுபற்றி பேசப்பட்டது. உடல்நிலை சரியில்லாத ரஜினிக்குப் பதில் போர்க்கள காட்சிகளில் அவருக்குப் பதில் நடித்தவர் லொள்ளு சபாவில் வரும் நடிகர் ஜீவா. குருவி படத்தில் த்ரிஷாவின் பையை லபக்கிக் கொண்டு பெண்களிடம் தர்ம அடி வாங்குவாரே... அவர்தான்.

எந்திரன் படத்தில் வரும் ரயில் சண்டைக் காட்சியிலும், எந்திரன் சிட்டி பிரேக் டான்ஸ் ஆடும் காட்சியிலும் ரஜினிக்குப் பதில் அவரது முகம் போன்ற மாஸ்க் அணிந்த வேறு நடிகர்கள்தான் நடித்தனர். கோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம். ரஜினியின் மேனரிசங்களை கொண்டிருந்தால் யாரையும் ரஜினி போல் காட்டலாம்.

ரஜினியின் உடல்நலக்குறைவு காரணமாக சண்டைக் காட்சியில் அவரை நடிக்க வைப்பதற்குப் பதில் லொள்ளு சபா ஜீவாவை டூப்பாக ரஜினிக்குப் பதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். நேற்றுவரை செய்தியாக இருந்தது இன்று படத்துடன் ஆதாரத்தோடு வெளியாகியிருக்கிறது.

கோச்சடையான் சண்டைக் காட்சிக்கு கிடைக்கும் கைத்தட்டல்களில் பாதி ஜீவாவுக்கு சொந்தமானது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ஜீவாவை வைத்து ஒரு படம் எடுத்து அதனை ரஜினி நடித்த படம் போல வெளியிடலாம். தலைவர் கலக்கிட்டார் என்று ஒட்டு மொத்த ரசிகர்களும், ஊடகங்களும் பாராட்டும்.

கேட்கவே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறதில்லையா..

Comments