5th of May 2014
சென்னை::ஜனனி அய்யருக்கு தமிழில் கைவசம் படம் இல்லாததால் மலையாளத்தில் கவனம் செலுத்துகிறார்.‘அவன் இவன்', ‘பாகன்‘, ‘தெகிடி' என விரல்விட்டு எண்ணும் அளவுக்கே ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் ஜனனி அய்யருக்கு தற்போது கைவசம் தமிழ் படம் எதுவும் இல்லை. இதையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்துகிறார்.இதுபற்றி அவர் கூறியது:

தமிழில் நடிக்க தயாராக இருக்கிறேன். தற்போது மலையாள படங்கள் தேடி வருவதால் அதை ஏற்கிறேன். ‘கூதரா' படத்தில் வடக்கு மலபாரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணாக நடித்தேன். ‘எடிசன் போட்டோ' படத்தில் துளு பிராமண பெண்ணாக வேடம் ஏற்கிறேன். மூசாயிலே குதிரமீனுகல் படத்தில் அஞ்சல் துறையில் பணி புரியும் பெண்ணாக நடிக்கிறேன். இப்படி படத்துக்கு படம் மாறுபட்ட வேடம் கிடைப்பது பெருமையாக இருக்கிறது. தமிழில்தான் அறிமுகம் ஆனேன். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில்தான் இருந்தேன். ஆனால் விதி என்னை மலையாள சினிமா பக்கம் திருப்பிவிட்டது.
இதை நானே எதிர்பார்க¢கவில்லை. தமிழில் வாய்ப்பு இல்லாத நிலையில் மலையாளத்தில் நடிக்கிறேன். மலையாள சினிமா என்னை தத்து எடுத்துக்கொண்டுள்ளது என்று கூட கூறலாம். என்னை ரசிகர்கள் கேரளத்து பெண்ணாகவே பார்க்கிறார்கள். ஆதரவு தருகிறார்கள். இது எல்லாமே எனக்கு அதிகப்படியான சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.இவ்வாறு ஜனனி அய்யர் கூறினார்...
Comments
Post a Comment