எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்!!!

10th of May 2014
சென்னை::சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு உறுதிப்படுத்தி இருக்கிறது த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட இவர்கள் இருவரும் அன்னியோன்யம் காட்டிய சமீபத்திய நிகழ்வு.

நிச்சயமாக பாண்டிராஜ் இயக்கத்தில் இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படம்தான் இந்த மாயத்தை செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். வருகிறது.. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சரி.. நடிக்கும்போதும் சரி.. சிம்பு, நயன்தாரா இருவருமே இயல்பான நட்புடன் தான் பேசிக்கொண்டார்கள்.

ஷாட்டிலும்கூட பாண்டிராஜ் சொல்லும் சொல்லும் எதையும் மறுக்காமல், காட்சிக்கேற்ப அன்னியோன்யமாகவும் நடித்துக் கொடுத்தார்கள். ஷாட் முடிந்தபின்னும்கூட அவரவர் கேரவனுக்கு செல்லாமல் வெளியிலேயே நாற்காலியில் அமர்ந்து உரையாடினார்கள். அதைத்தொடர்ந்து சிம்பு கொடுத்த பிறந்தநாள் விருந்தின்போது நயன்தாராவும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இப்போது த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டியிலும் இருவரும் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்கள் காலத்துக்குத்தான் எதையும் மாற்றும் சக்தி இருக்கிறதே.. ஆகவே எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்..

Comments