நடிகைகள் விசயத்தில் நான் ஒருபோதும் தலையிடுவதே இல்லை: விஜயசேதுபதி!!!

21st of May 2014
சென்னை::சிவகார்த்திகேயன் போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களெல்லாம் தங்களுடன் ஹன்சிகா, நயன்தாரா என முன்னணி நடிகைகளை நடிக்க வைத்து தங்களது ரேஞ்சை உயர்த்திக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் விஜயசேதுபதியோ இன்னமும் அதே காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா என்று பின்தங்கியிருககும் ஹீரோயின்களுடனேயே நடித்துககொண்டிருக்கிறார்.
 
அதனால் அவரிடம், இந்த மூன்றாம் தட்டு நடிகைகளுடன் நடிப்பதை தவிர்த்து விட்டு, மேல்தட்டு ஹீரோயினிகளுடன் நடித்து உங்கள் லெவலை உயர்த்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கலாமே என்று அவரைக்கேட்டால், அதை அமைதியாக கேட்கும் விஜயசேதுபதி, கதைக்கு எந்த மாதிரி ஹீரோயின் தேவையோ அதை டைரக்டர்கள் முடிவு செய்கிறார்கள. இதில் நான் என்ன சொல்ல முடியும். என் வேலை அவர்கள் சொல்வது போல் நடித்துக்கொடுப்பது மட்டும்தானே என்கிறார்.
 
அப்படியென்றால், நீங்கள் சில கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வது போல் செய்தி வருகிறதே என்று அவரைக்கேட்டால், அது வளர்ந்து வரும்போது எல்லா ஹீரோக்களைப்பற்றியும் சினிமாவில் பரவுகிற கிசுகிசுக்கள்தான். நான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பதை அதுதான் தெரிவிக்கிறது. மற்றபடி நடிகைகள் விசயத்தில் நான் ஒருபோதும் தலையிடுவதே இல்லை. அது என் வேலையும் இல்லை என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார் விஜயசேதுபதி...

Comments