நன்றி சொல்ல வருகிறார் சந்தானம்..! தயாராக இருங்கள் ரசிகர்களே!!!


14th of May 2014
சென்னை::தான் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியில் மிரண்டுபோயிருக்கிறார் சந்தானம். ரசிகர்களின் அன்பிற்கு பதில் மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தியேட்டர்களில் படம் பார்க்கும் ரசிகர்களை நேரிலேயே சந்திக்க இன்று கிளம்பிவிட்டார் சந்தானம்.
 
அதன்படி இன்று வேலூர், திருவண்ணாமலையில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஓடும் தியேட்டர்களில் ரசிகர்களை சந்தானம், படத்தின் நாயகி அஸ்னா ஜாவேரி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சந்திக்கின்றனர். இதைத்தொடர்ந்து நாளை(15.05.14) பாண்டிச்சேரி, திருச்சியிலும் 16ஆம் தேதி மதுரை, 17ல் கோவை ஆகிய ஊர்களுக்கும் வருகை தர இருக்கிறார்கள். ஆகவே சந்தானத்தை சந்திக்க தயாராக இருங்கள் ரசிகர்களே....
 
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னாவின் கவர்ச்சி சேவைக்கு கடிவாளம் போட்ட சந்தானம்!
 
சந்தானம் நாயகனாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர் ஆஷ்னா சவேரி. மும்பை நடிகையான இவர், அங்கு ஏராளமான விளம்பர படங்களில நடித்தவராம். பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமான ஆஷ்னா, பாலிவுட் படங்களில நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியிருந்தாராம்.
 
அப்போதுதான் சந்தானத்துக்கு நாயகி தேடி மும்பை சினிமா பஜாரில் சுற்றிக்கொண்டிருந்த அவரது படக்கூழுவினர் ஆஷ்னாவைப்பற்றி கேள்விப்பட்டு அலாக்காக அவரை அள்ளி வந்து விட்டனர். ஆனால், ஸ்பாட்டில் அவரை இறக்கி விட்டபோது, தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத ஆஷ்னா, திருதிருவென்று விழித்தபடி தடுமாறியிருக்கிறார்.
 
அதைப்பார்த்த சந்தானம், தான் முதன்முதலான நாயகனாக நடிக்கிற படம் நன்றாக வரவேண்டும் என்று யோசித்தவர், ஒவ்வொரு ஷாட்டையும் படமாக்குவதற்கு முன்பு, நன்றாக ரிகர்சல் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே விளம்பர படங்களில் நடித்த அனுபவம் இருந்ததால், அவர் கொடுத்த டிப்ஸை வைத்து முடிந்தவரை இயல்பாக நடித்தாராம் ஆஷ்னா.
 
அதோடு, பாடல் காட்சி என்று வந்தபோது, எந்த மாதிரியான கிளாமர் உடையணிந்து நடிக்கவும் தயாராக இருந்தாராம். ஆனால், சந்தானம்தான், எனது படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வருகிறார்கள். அதனால், மிதமான கிளாமர் போதும் என்று ஆஷ்னாவின் கவர்ச்சி சேவைக்கு கடிவாளம் போட்டு விட்டாராம்.
 

Comments