ஆர்.பார்த்திபன் தற்போது இயக்கி வரும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: நான்கு இயக்குநர்களின் கையெழுத்தில் கதை டைட்டில்!
27th of May 2014
சென்னை:ஆர்.பார்த்திபன் தற்போது இயக்கி வரும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படத்தின் டைட்டில் எழுத்துக்கள் பிரபலமான நான்கு இயக்குநர்களின் கையெழுத்துக்களாம். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படம் சினிமா சம்மந்தப்பட்ட கதை என்பதால், அப்படத்தின் டைட்டில் எழுத்துக்களை தமிழ்சினிமாவில் சாதித்த நான்கு ஜாம்பவான்களின் கையெழுத்தில் உருவாக்கிய பார்த்திபன் இந்த விஷயத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.

கதை,
திரைக்கதை, வசனம் இயக்கம் படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில், படத்தின்
டைட்டில் ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதுமட்டுமல்ல,
இது தொடர்பாக ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறதர். கதை, திரைக்கதை, வசனம்
இயக்கம் படத்தின் டைட்டில் எழுத்துக்கள் யார் யாருடைய கையெழுத்தில்
உருவாக்கப்பட்டது என்பதை, அதாவது நான்கு இயக்குநர்களுடைய பெயர்களையும்
சரியாகச் சொல்பவர்களுக்கு, படம் வெளியாகும்போது 4 டிக்கெட்கள் இலவசமாக
வழங்கப்படுமாம். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், சரியான
விடையை தெரிவிக்க வேண்டி ஈமெயில் முகவரியையும், ஒரு செல்போன் எண்ணையும்
தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment