மீண்டும் அஜீத்-சுந்தர்.சி இணைவார்கள் - குஷ்பூ தகவல்!!!

9th of May 2014
சென்னை::கலகலப்பு படத்திற்கு பிறகு விஷாலைக்கொண்டு சுந்தர்.சி இயக்கிய, மதகஜராஜா இன்னும் திரைக்கு வர முடியாமல் கிடக்கிறது. அதையடுத்து சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படமும் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படத்தில் சுந்தர்.சி, ஹன்சிகா, வினய், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அனுஷ்கா நடித்த அருந்ததி, ஜோதிகா நடித்த சந்திரமுகி இரண்டு படங்களும் கலந்த ஒரு புதுவிதமான கலவையாக இப்படம் உருவாகி வருவதாக முன்பு பரபரப்பாக செய்திகள் வெளியிட்டனர். ஆனால், இப்போது அப்படம் குறித்த பேச்சு அடங்கியிருக்கிறது. முன்பே தயாரான படம் இன்னும் ஏன் வெளியாகவில்லை என்று விசாரித்தபோது, பைனான்ஸ் பிரச்சினையில் படம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே அரண்மனை யூனிட் சத்தமில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேசமயம், அடுத்தபடியாக யாராவது முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் வாங்கி படமெடுத்தால்தான் மீண்டும் மார்க்கெட்டில் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என்று நினைக்கும் சுந்தர்.சி., முன்பே அஜீத்திடத்தில் கதை சொல்லியிருப்பதாக செய்திகள் வெளியிட்டார். ஆனால், இப்போது அவரது மனைவியான குஷ்பூ, விரைவில் அஜீத்தைக்கொண்டு சுந்தர்.சி ஒரு படத்தை இயக்கயிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே அஜீத்தை வைத்து உன்னைத்தேடி என்ற படத்தை இயக்கியவர் சுந்தர்.சி என்பதால் மீண்டும் அவர்கள் இணைந்து பெரிய ஹிட் கொடுப்பார்கள் என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்...
 

Comments