ஆந்திரவாலாக்களின் மனம் கவர்ந்த ‘மனம்’!!!

25th of May 2014
சென்னை::தமிழ்நாட்டைப்போல நேற்று ஆந்திராவிலும் திருவிழா கொண்டாட்டம் தான். ‘விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் ‘கோச்சடையான்’ ஒரு பக்கம் ரிலீஸானலும் ஆந்திர ரசிகர்களின் கவனம் எல்லாம் நேற்று வெளியான சரித்திர பிரசித்தி பெற்ற ‘மனம்’ படத்தின் மீதுதான் இருந்தது.
 
காரணம் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினரும் சேர்ந்து நடித்த படம் உலகசினிமாவில் இது ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ஸ்ரேயா, சமந்தா நடித்து விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நேற்று வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் கலக்கிவருகிறது.
 
இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி தெலுங்கு திரையுலக பிரபலங்களுக்காக நேற்று திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு  வந்த ராம்சரணும் அல்லு அர்ஜூனும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இப்போதுவரை படத்தை பாராட்டித்தள்ளி வருகிறார்கள்.
 
ஏற்கனவே இந்த படம் ராம்சரணை தேடிவந்து அவர் கண்டுகொள்ளாததால் பின்னர் நாகார்ஜூனாவுக்கு கைமாறிப்போனது. நேற்று படத்தை பார்த்த சிரஞ்சீவி இந்தமுறை தனது மகன் ராம்சரணை விக்ரம் கே.குமாரின் டைரக்‌ஷனில் நடிக்கவைக்க விருப்பப்பட்டுள்ளாராம்....

Comments