30th of May 2014
சென்னை::ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார் தனுஷ். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது பால்கி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் மற்றும் பிரபல இந்தி இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, ரகேஷ் ஓம்பிரகாஷ் மெஹரா, கரண் ஜோஹர், அனுராக் பாசு, கவுரி ஷிண்டே ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் மற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் தனுஷ். இதுவரை பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்போது 'ஷமிதாப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்..
Comments
Post a Comment