சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்???!!!

 9th of May 2014
சென்னை::அஜித்-சுந்தர்.சி இருவரும் ஒரு புதிய படத்தில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக த்ரிஷா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜித், சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து, சுந்தர்.சி. மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்-சுந்தர்.சி விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
 
சுந்தர் சி. ஏற்கெனவே அஜித் நடிப்பில் உன்னைத்தேடி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித், மாளவிகா, சுவாதி, கரண் ஆகியோர் நடித்திருந்தனர். அந்தவகையில், அஜித்தை வைத்து இரண்டாவது முறையாகப் படம் இயக்கப் போகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
 

Comments