பட புரமோஷனிலும் நயன்தாரா அலம்பல்:-மீடியாக்களைக்கண்டு ஓட்டம் பிடிக்கும் நயன்தாரா!!!!

4th of May 2014
சென்னை::புரமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற புகார் எழுந்ததையடுத்து படம் தொடர்பாக பேட்டிகள் அளித்து வருகிறார் நயன்தாரா. அதிலும் அலம்பல் செய்வதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சேகர் கம்முலா இயக்கிய ‘நீ எங்கே என் அன்பே’ (தெலுங்கில் அனாமிகா) பட ஆடியோ விழாவை  ஹீரோயின் நயன்தாரா புறக்கணித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து, ‘விரைவில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பேன்‘ என்று நயன்தாரா பேட்டி அளித்தார். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி நடத்த போதிய அவகாசம் இல்லை என பட குழுவினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இணையதள மீடியாவை தொடர்பு கொண்டு நயன்தாரா பேட்டி அளித்து வருகிறார். ‘ஜன நெரிசலில் கேமராவை மறைத்து ஷூட்டிங் நடத்தினார்கள். கடுமையான வெயிலில் நடித்ததால் உடலில் நீர்சத்து குறைந்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஒவ்வொரு காட்சியும் 2 முறை படமாக்கப்பட்டது என்று படத்தில் நடித்த அனுபவத்தை குறைகளாக சொல்லி வருகிறார் நயன்தாரா. இதை அறிந்து டைரக்டர் சேகர் கம¢முலாவும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

மீடியாக்களைக்கண்டு ஓட்டம் பிடிக்கும் நயன்தாரா!

ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா, அந்த சமயங்களில் மீடியாக்களை தேடித்தேடிச்சென்று பேட்டி கொடுப்பார். தான் படித்த காலங்களில் நடந்த சுவையான விசயங்களைகூட சொல்வார். அப்போது தனக்கு காதல் கடிதம் கொடுத்தவர்களை தான் கன்னத்தில் அறைந்ததையும் கதைகதையாய் சொல்லி வியக்க வைத்தார்.
 
ஆனால், அப்படிப்பட்ட நயன்தாரா இப்போதெல்லாம் மீடியாக்களைக்கண்டாலே ஜென்ம எதிரிகளைப்போல் பார்க்கிறார். காரணம், சிம்புவின் காதல் விவகாரத்தை விட பிரபுதேவாவை இவர் காதலித்தபோது அவரது இமேஜை கெடுக்கும் வகையில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு விட்டார்களாம. குறிப்பாக, திருமணத்துக்கு முன்பே பிரபுதேவாவை சந்திக்க மும்பைக்கு செல்லும் நயன்தாரா, அங்கு அவருடன் ஹோட்டல்களில் பல நாட்கள் ஒன்றாக தங்கி விட்டு திரும்புகிறார் என்று வெளியான செய்தி அவரை ரொம்பவே புண்படுத்தி விட்டதாம்.
 
அதிலிருந்துதான் இனிமேல் மீடியாக்களை தான் சந்திக்கப்போவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கெண்ட நயன்தாரா, இப்போதுகூட தான் நடிக்கும் படங்களின் ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு போனால் மீடியாக்களை சந்திக்க வேண்டியதிருக்கும். அப்போது ஏடாகூடமாக எதையாவது கேட்பார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்றுதான் ஓடி ஒழிக்கிறாராம்.
 
இதுபற்றி தனது நட்பு நடிகர்களிடம் சொல்லும் நயன்தாரா, அஜீத் பாணியில் எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று இருப்பது எவ்வளவோ மேல். நிம்மதியாக இருக்கலாம் என்கிறாராம்...

Comments