ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் லிங்கா பலத்த போலீஸ் பாதுகாப்பு: மைசூர் அரண்மனையில் லிங்கா படப்பிடிப்பு!!!
3rd of May 2014
சென்னை::படத்தின் முக்கிய காட்சிகளை மைசூர் அரண்மனை மற்றும் மாண்டியா
மாவட்டத்தின் சில பகுதிகளில் எடுக்கவிருக்கிறார்கள்.
ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் லிங்கா. கே எஸ்
ரவிக்குமார் இயக்குகிறார்.
படையப்பாவுக்குப் பிறகு மைசூரில் படமாகும் ரஜினி படம் இந்த லிங்காதான்.
படப்பிடிப்பு தொடங்கிய நேற்று அதிகாலையிலேயே ரஜினியைப் பார்க்க ஏராளமான
ரசிகர்கள் கூடிவிட்டனர்.
பொதுவாக கர்நாடகத்தில் ரஜினிக்கு ஒரு முதல்வருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். ரஜினி வருவதற்கு முன்பே, அவர் வரும் பாதையில் எந்தத் தடைகளும் இல்லாமல் போலீசார் பார்த்துக் கொள்வார்கள். அந்த வழக்கம் மாறாமல், இந்த முறையும் ரஜினிக்கும், லிங்கா படப்பிடிப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினசரி 6 இன்ஸ்பெக்டர்கள், 10 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 60 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முத்து படம் போல, லிங்காவும் குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த படம் என்பதால் முக்கிய காட்சிகளை மைசூர் அரண்மணையில் எடுக்கின்றனர்.
உரிய அனுமதி பெற்று இங்கு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். லிங்கா படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் கூறுகையில், "நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்துக்கு உலக அளவில் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவரது பேரனின் பெயரில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். படையப்பா படத்தை இயக்கிய அதேக் குழுவினர்தான் "லிங்கா' படத்தையும் இயக்குகின்றனர். எனவே, இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும்," என்றார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில்,
இந்தப் படத்தை தயாரிக்க ரஜினிகாந்த் எனக்கு வாய்ப்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப "லிங்கா' திரைப்படம் அமையும்," என்றார்..

Comments
Post a Comment