அனேகன் படத்தில் பவதாரிணி!!!

5th of May 2014
சென்னை::மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அனேகன்’. 
இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆமிரா நடிக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அனேகன் படத்திற்காக இளையராஜாவின் மகளும், இசை அமைப்பாளரும், பின்னணி பாடகியுமான பவதாரிணி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
ஆத்தாடி ஆத்தாடி…’ என துவங்கும் அந்தப் பாடலை கவிப் பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் பவதாரிணி குரலில் சமீபத்தில் இப்பாடலை பதிவு செய்துள்ளனர்..

Comments