9th of May 2014
சென்னை::ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பூஜை". இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை::ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பூஜை". இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பூஜை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடித்தபோது விஷால்
காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர் இல்லாத மற்ற காட்சிகள்
படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெறும் குத்துப்பாட்டு ஒன்றிற்கு நடனம் ஆட நடிகை
ஆண்ட்ரியா ஒப்புக்கொண்டுள்ளார் ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது
இதுவே முதல்முறை. படுகவர்ச்சியான உடையில் அவர் ஆடும் குத்துநடனம்
படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ரகசியமாக நடந்து வருகிறது.
படக்குழுவினர் தவிர வேறு யாரையும் அனுமதிக்காமல் கடந்த இரண்டு நாட்களாக
இந்த பாடலின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி ஸ்ருதிஹாசனின் காஸ்ட்யூம்
டிசைனராக வெளிநாட்டில் இருந்து ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்
தெரிவித்தனர்..
Comments
Post a Comment