9th of May 2014
சென்னை::துப்பாக்கி படத்தில், ''கூகுள் கூகுள்...'' என்ற பாடலை தனது
சொந்தக்குரலில் பாடிய விஜய், அதற்கடுத்து நடித்த தலைவாவில் ''வாங்கண்ணா
வணக்கங்கண்ணா...'' என்ற பாடலையும் பாடியிருந்தார். அதேபோல் ஜில்லாவில்
பாடிய கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது. அதனால் கடந்த
சில ஆண்டுகளாக தனது படங்களில் பின்னணி பாடாமல் இருந்த விஜய், இனிமேல்
படத்துக்குப்படம் பாடி விடுவது என்ற முடிவில் இருக்கிறார்.
மேலும்,
விஜய் பின்னணி பாடும் பாடல்களை மக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப ஒலிக்க
வைத்து ஹிட் பண்ணிவிடும் அவரது ரசிகர்கள், ஒரு பாடல் என்றில்லாமல் இரண்டு
பாடல்களாவது படத்துக்குப்படம் பாட வேண்டும் என்று விஜய்யை கேட்டுக்கொண்டு
வருகிறார்களாம். அதனால், இப்போது கத்தியில் ஒரு பாடலை பாடியிருக்கும்
விஜய், இன்னொரு பாடலை பாடுவது பற்றி ஆலோசனையில் உள்ளாராம்.
மேலும்,
தற்போது கத்தி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டதால்,
அடுத்த மாதம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாராகிக்கொண்டிருக்கிறார்
ஏ.ஆர்.முருகதாஸ். அதனால் அதை ஆவலுடன் எதிர்பார்த்திக்கும் விஜய் ரசிகர்கள்,
பர்ஸ்ட் லுக்கோடு விஜய் பாடிய ஒரு பாடலையும் வெளியிட வேண்டும் என்று
விண்ணப்பித்து வருகிறார்களாம். அதனால் ரசிகர்கள் சார்பாக முருகதாஸிடம் தனது
கோரிக்கையை முன்வைத்திருக்கிறாராம் விஜய்..
Comments
Post a Comment