குஞ்சு நைனா’ விமல்.. ‘தொந்திப்படவா’ ராஜ்கிரண் – மஞ்சப்பை கலாட்டா!!!

29th of May 2014
சென்னை::திருப்பதி பிரதர்ஸும் இயக்குனர் சற்குணமும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் மஞ்சப்பை. சற்குணத்துக்கு இது முதல் தயாரிப்பு.. படத்தை இயக்கியுள்ளார் சற்குணத்தின் அசிஸ்டெண்ட் ராகவன்.. விமல் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, விமலின் தாத்தாவாக, கதையின் ஆணிவேராக நடித்திருக்கிறார் ராஜ்கிரண்..
 
இந்தப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்து படத்தை லிங்குசாமிக்கு போட்டுக்காட்டியிருக்கிறார் ராகவன். படத்தை பார்த்த லிங்குசாமி, “விக்ரமன், பாக்யராஜ் இவர்கள் இருவரும் ‘பீக்’கில் இருந்தபோது கதை, திரைக்கதையில் என்ன மாதிரியான ஆதிக்கம் செலுத்தினார்களோ அதே மாதிரியான அழுத்தம் கொடுத்து கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டார் ராகவன்” என்று இயக்குனருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இந்தப்படத்தில் ராஜ்கிரண் தன் பேரன் விமலை ‘குஞ்சு நைனா’ என்றுதான் கூப்பிடுவாராம். அதேபோல விமலும் ராஜ்கிரணை ‘தொந்தி படவா’ என்று கிண்டலாக அழைப்பாராம். படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Comments