7th of May 2014
சென்னை::சந்தானம் இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
சூரி ஒருநாளைக்கு அஞ்சு லட்சம் சம்பளம் கேட்கிறார். வடிவேலுவை கமிட்
பண்ணினால் வரிவிலக்கு கிடைக்காது என்ற பயம். கருணாஸ், கஞ்சா கருப்பு
முகத்தை போஸ்டரில் போட்டாலே மக்கள் தியேட்டருக்கு வர யோசிக்கிறார்கள். இது
போன்ற காரணங்களினால் காமெடியனுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே சின்ன
பட்ஜெட்டில் படம் எடுக்க எண்ணுபவர்களுக்கு இப்போதைய சாய்ஸ் யார் தெரியுமா?
கவுண்டமணிதான்.
சில பல வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த
கவுண்டமணி, நீண்டஇடைவெளிக்குப் பிறகு தற்போது49 ஓ என்ற படத்தில் நடித்து
வருகிறார். அந்தப்படம் வெளியாகி கவுண்டருக்கு மீண்டும் மவுசு வரும் என்ற
எதிர்பார்ப்பில் அவரை ஒப்பந்தம் செய்ய சிலர் கவுண்டமணியை அணுகினார்கள்.
கவுண்டமணியோ வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.
ஏன்? 49 ஓ படம் ரிலீஸான பிறகே புதுப்படங்களை ஒப்புக்கொள்வாராம்..
Comments
Post a Comment