நயன்தாராவுடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு நட்பை வளர்க்கும் த்ரிஷா!!!!

19th of May 2014
சென்னை::நயன்தாராவுக்கும், த்ரிஷாவுக்குமிடையே நீண்டகாலமாகவே திரைக்குப்பின்னால் பனிப்போர் இருந்து வருகிறது. காரணம், நயன்தாரா விஜய் படத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தினால், த்ரிஷாவும் தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் அந்த வாய்ப்பை கைப்பற்ற தீவிரம் காட்டுவார். இப்படி சில சமயங்களில் நயன்தாராவுக்கு கைக்கு எட்டிய வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போனதற்கான முழுக்காரணமாக த்ரிஷா இருந்திருக்கிறார்.
 
அதனால்தான் அவர்கள் இருவரும் சினிமா விழாக்களில் சந்தித்தாலும் பேசிக்கொள்வதில்லை. எதிரும் புதிருமாகவே இருந்து வந்தனர். ஆனால், இப்போது காலம் கடந்து விட்டதால், இனியும் நயன்தாராவுடன் போட்டி பொறாமை வேண்டாம். நல்ல நட்பை கடைபிடிப்போம் என்று நினைத்த த்ரிஷா, சமீபத்தில் தான் கொண்டாடிய பிறந்த நாள் பார்ட்டிக்கு நயன்தாராவையும் வரவழைத்திருந்தார்.
 
அதையடுத்து, நயன்தாராவும் பழைய பகையை மறந்து த்ரிஷாவுக்கு பொக்கை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லச்சென்றிருந்தார். ஆனால், அப்படி சென்ற இடத்தில், அவர்கள் மனம் விட்டு நாலு வார்த்தை பேசுவதற்கு முன்பே, திடீரென்று சிம்புவும் அங்கு ஆஜராகி விட்டாராம். இதனால், நயன்தாரா- த்ரிஷாவுக்கிடையிலான பேச்சுவார்ததை தொடராமல் சிம்பு பக்கம் திரும்பி விட்டதாம்.
 
ஆனால், அப்படி அவர் பக்கம் திரும்பிய நயன்தாரா, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து அவசரமாக வெளியேறி விட்டாராம். இதனால், பிறந்த நாள் பார்ட்டியில் நடந்ததற்கு நயன்தாராவிடம் பின்னர் வருத்தம் தெரிவித்துக்கொண்ட த்ரிஷா, இப்போது நயன்தாராவுடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொண்டிருக்கிறார்...

Comments