அஞ்சான்’ டப்பிங்கில் சூர்யா தீவிரம்!!!



28th of May 2014
சென்னை::
பெரும்பசியுடன் காத்திருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். ‘சிங்கம்-2’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்துவிட்டு அடுத்து சாதாரணமாக ஒரு படத்தை கொடுத்து அவர்களை திருப்தி படுத்திவிட முடியுமா..? அதனால் அதைவிட அதிகமாக ஃபுல்மீல்ஸ்’ பரிமாறும் பொருட்டு சூர்யாவும், லிங்குசாமியும் இராப்பகலாக ‘அஞ்சான்’ வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
 
‘அஞ்சான்’ படத்தில் ஒரு பாடல் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகம் பிடித்துள்ள நிலையில் சூர்யா தற்போது தீவிரமாக டப்பிங் பேசிவருகிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக்.

Comments