1st of May 2014
சென்னை::நரைத்த தலைமுடி, ஒரு படம் முழுக்க கோட் சூட், இன்னொரு படம் முழுக்க வேட்டி சட்டை என எதையும், யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்துக்கொண்டு அதில் சிங்கநடை போட்டுவருகிறார் நம்ம ‘தல’. அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என எல்லாமே மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தீனிதான்.
சென்னை::நரைத்த தலைமுடி, ஒரு படம் முழுக்க கோட் சூட், இன்னொரு படம் முழுக்க வேட்டி சட்டை என எதையும், யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்துக்கொண்டு அதில் சிங்கநடை போட்டுவருகிறார் நம்ம ‘தல’. அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என எல்லாமே மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தீனிதான்.
சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் இன்று இந்த இடத்தை பிடித்திருப்பதாலேயே அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தன்னம்பிக்கையை விரும்புவோருக்கும் அஜித்தை ரொம்பவே பிடிக்கும். மே-1 என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று தொழிலாளர் தினம்.. இன்னொன்று ‘தல’ பிறந்தநாள்.
இன்று பிறந்தநாள் காணும் அஜித்திற்கு நமது poonththalir-kollywood. தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
மே 1 உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான
அஜீத்குமாரின் பிறந்தநாளும் கூட. உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜீத், இன்று
தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மற்ற நடிகர்களை போன்று ஆடம்பரமாய்
விழா எல்லாம் எடுத்து கொண்டாடுவது கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம்,
ரசிகர்கள் சந்திப்பு என்று எதையும் செய்ய மாட்டார் அஜீத். ஏன் தனது
பிறந்தநாளுக்கு ஒரு புத்தாடை கூட உடுத்துவாரா என்றால்... இல்லை என்று தான்
அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தளவுக்கு பிறந்தநாள்
கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். இந்தாண்டும்
பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. தனது மனைவி மற்றும் குழந்தையோடு
புனே சென்றுள்ளார். அங்கு ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபாவை
தரிசனம் செய்துவிட்டு இருதினங்களில் சென்னை திரும்பி, கெளதம் மேனன் பட
ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.
43வது பிறந்தநாளை கொண்டாடும் அஜீத் பற்றிய சில தகவல்கள்...
1971 மே 1-ம் தேதி, செளகந்திராபாத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர் அஜீத்.
*
பைக்ரேஸ் பிரியரான அஜீத், 1992-ம் ஆண்டு தெலுங்கு படமான பிரேம புஸ்தகாம்
படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த முதல்படம்
அமராவதி. பின்னர் ஆசை படம்மூலம் பிரபலமான அஜீத், காதல் கோட்டை படம் மூலம்
பேசப்படும் நடிகரானார்.
* தொடர்ந்து காதல்
நாயகனாக வலம் வந்தவர் அமர்க்களம் படம் மூலம் ஆக்ஷ்ன் ஹீரோவாகவும்
உருவெடுத்தார். தீனா, அட்டகாசம், என அதிரடி ஆக்ஷ்ன் படங்களையும்
கொடுத்தார்.
* எம்.ஜி.ஆர்., - சிவாஜிக்கு
அடுத்தப்படியாக ரஜினி - கமல் உருவானதை போன்று இவர்களுக்கு அடுத்தபடியாக
அஜீத் - விஜய் இடையே தொழில் ரீதியான போட்டி உருவானது. ஆனால் இவர்கள்
நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின்
பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர்.
*
ஏ.ஆர்.முருகதாஸின் தீனா படத்தில் நடித்தபோது அவரது பெயருக்கு முன்னால் 'தல'
எனும் அடைமொழி ஒட்டிக்கொண்டது. அது இப்போதும் தொடர்கிறது.
* அமர்க்களம் படத்தில் நடித்தபோது, அப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
*
ஆக்ஷ்ன், லவ் என்று இல்லாமல், வாலி, வில்லன், வரலாறு போன்ற
படங்களில்
வித்தியாசமாக நடித்தார். குறிப்பாக சிட்டிசன் படத்தில் பல்வேறு
கெட்டப்புகளில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
*
பைக் ரேஸ் மட்டுமல்லாது அஜீத், கார் ரேஸ் பிரியரும் கூட. சினிமாவில்
முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட பின்னர் சில காலம் கார் ரேஸ்களில் கவனம்
செலுத்தினார். இதனால் அந்த சமயம் அஜீத் மார்க்கெட் டல்லடித்தது.
*
பில்லா தந்த பிரேக்... ரஜினி நடித்த பில்லா படத்தை மீண்டும் ரீ-மேக்
செய்தனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்த இப்படம் சூப்பர்-டூப்பர்
ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தின் பின்னணி இசையும், அஜீத்துக்கு அமைந்த
தீமும் பெரிதாக பேசப்பட்டது. டல் அடித்த தனது மார்க்கெட்டை பில்லா படம்
மூலம் மீட்டார் அஜீத்.
* மங்காத்தா 50...
அதன்பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் நடித்த படம்
மங்காத்தா. இது
அவரது 50வது படம். இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, வசூல்
ரீதியாகவும் அவருக்கு பெரும் சாதனை கொடுத்த படமாகவும் அமைந்தது.
*
சால்ட் அண்ட் பெப்பர் லுக்... பொதுவாக நரைமுடி வந்தாலே அதை டை
அடித்து
மறைத்து இளமையாக காட்டும் நடிகர்கள் ஏராளம். ஆனால் அஜீத் அதையே ஒரு
ஸ்டைலாக்கி சால்ட் அண்ட் பெப்பர் லுக் என மங்காத்தா படத்தில் நடித்தார்.
ரசிகர்களை அது வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஆரம்பம், வீரம், இப்போது
நடித்து வரும் கெளதம் மேனன் படம் வரை இந்த ஸ்டைல் தொடர்கிறது.
*
ரசிகர் மன்றத்தை கலைத்த அஜீத்... பொதுவாக தமிழ் சினிமாவில் அஜீத்
படத்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேறு எந்த படத்திற்கும் இருக்காது.
அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் முதல்நாள் முதல்ஷோவை அமர்க்களப்படுத்தி
வரவேற்பர். ஆனால் இந்த விஷயம் எல்லாம் அஜீத்திற்கு சுத்தமாக பிடிக்காது.
ஒவ்வொரு முறை தனது ரசிகர்களை பற்றி பேசும்போது, எனக்காக இதுபோன்று எதுவும்
செய்யாதீர்கள், அவரவர் வேலையை கவனமாக செய்யுங்கள் என்று அன்பு கட்டளை
போடுவார். ஆனபோதும் ஒருகட்டத்தில் அவரது ரசிகர்கள் சிலர் அரசியல், அது, இது
என்று இறங்கியதால் கோபமான அஜீத், தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார்.
அஜீத்தின் இந்த செயலை பலரும் பாராட்டினர். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும்,
அவரது ரசிகர்கள் அஜீத்தின் படத்திற்கு எப்பவும் போல தங்களது கொண்டாட்டத்தை
வெளிப்படுத்தி தான் வருகின்றனர். அதேப்போல் பிறந்தநாளையும் சிறப்பாக
கொண்டாடுகின்றனர்.
சினிமாவில் எந்த பின்னணியும்
இன்றி கடுமையாக உழைத்து, இன்று இந்தளவுக்கு முன்னேறி இருக்கும்
அஜீத்துக்கு வாசகர்களாகிய நீங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை
சொல்லுங்கள்..
Comments
Post a Comment