30th of May 2014
சென்னை::ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் அனிஸ் என்ற புதுமுக இயக்குநர்
இயக்கத்தில் ஜெய் - நஸ்ரியா நடித்த திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம்
இம்மாதம் வெளிவரவிருந்தது. தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின்
துணைத் தலைவர் அலிகான் இந்தப் படத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு
தாக்கல் செய்துள்ளதை அடுத்து திருமணம் எனும் நிக்காஹ் படம் வெளிவருவதில்
சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள 'திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை தவறாகவும், அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்தால், மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 'வேலாயுதம்' என்ற படத்தில் மன உணர்வுகளை புணப்படுத்தும் விதமாக காட்சிகளை எடுத்திருந்தார். தற்போது 'திருமணம் என்னும் நிக்காஹ்' படத்திலும் முஸ்லிம் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ளார். எனவே ரவிச்சந்திரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20ஆம் தேதியே புகார் செய்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே 'திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்திரவிடவேண்டும்” என்று அந்த மனுவில் கூறி இருக்கிறார் அலிகான்.
இந்த மனு நீதிபதி
எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி,
இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர்,
தணிக்கை குழவின் மண்டல அதிகாரி, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு
நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்..
Comments
Post a Comment