அண்ணே..என் படத்தைப் பாருங்க. தம்பியைக் காப்பாத்துங்க: வேல்முருகன் போர்வெல் என்ற பெயரில் சொந்தப்படம் எடுத்தஞ்சா கருப்பு!!!

29th of May 2014
சென்னை::காமெடி நடிகர்களுக்கு நடிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாணரமாக இருப்பவர் கஞ்சா கருப்பு. ராம் படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக் கொண்ட கருணாஸ் கடைசி நேரத்தில் கால்ஷீட் சொதப்பியதால், அமீருக்கு உதவி செய்யச் சென்ற கருப்புவுக்கு அந்தப் படத்தில் காமெடியனாகும் அதிர்ஷ்டம் அடித்தது. இப்படியாக அமீரினால் நடிகராக்கப்பட்ட கருப்பு, வேல்முருகன் போர்வெல் என்ற பெயரில் சொந்தப்படம் எடுக்கும் அளவுக்கு செமத்தியாய் பணம் சேர்த்துவிட்டார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, முதல் காப்பியும் தயாராகிவிட்டது. வேல்முருகன் போர்வெல் படத்தில் கஞ்சா கருப்பு கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதன் காரணமாகவோ என்னவோ வேல்முருகன் போர்வெல் படம் இதுவரை பிசினஸ் ஆகவில்லை? அண்ணே..என் படத்தைப் பாருங்க. தம்பியைக் காப்பாத்துங்க. என்று காலில் விழாத குறையாய் விநியோகஸ்தர்களை விரட்டிக் கொண்டு போனார் கருப்பு.
 
கருப்புவின் பருப்பு அவர்களிடம் வேகவில்லை போலிருக்கிறது. எனவே பாலா, லிங்குசாமி சசிகுமார் போன்ற முக்கியப்புள்ளிகளை துரத்த ஆரம்பித்திருக்கிறார் கருப்பு. எதற்கு? வேல்முருகன் போர்வெல் படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணிக் கொடுங்க என்று கேட்டுத்தான்...! பாவம் இதுவரை யாரிடமிருந்தும் பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லை.

Comments