19th of May 2014
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்டையான் அனிமேஷன் படம் வருகிற 23ந்
தேதி உறுதியாக ரிலீசாகிறது. உலகம் முழுவதும் 6 மொழிகளில் 6 ஆயிரம்
தியேட்டர்களில் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில்
வெளிவருகிறது. 120 தியேட்டர்களில் 3டி தொழில் நுட்பத்தில் ரிலீசாகிறது.
சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, உட்லன்ட்ஸ்,
சாந்தி, ஆல்பட், அபிராமி, பி.வி.ஆர். பெரம்பூர், எஸ் 2, ஏ.வி.எம்.
ராஜேஸ்வரி, உதயம் சூரியன், சந்திரன், சைதை ராஜ், மகாராணி, ஐட்ரீம், பாரத்,
உள்ளிட்ட தியேட்டர்களில் ரிலீசாகிறது. இவற்றில் இன்று முதல் முன்பதிவுகள்
தொடங்கியது. முதலில் மந்தமாக துவங்கிய முன்பதிவுகள் பின்பு நேரம் செல்லச்
செல்ல வேகமெடுக்கத் தொடங்கியது.
கடந்த 9ம் தேதி வெளிவருவதாக
அறிவிக்கப்பட்டபோது அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கிய முன்பதிவில்
இரண்டு மணிநேரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு
செய்யப்பட்டது. பின்பு முன்பதிவு நிறுத்தப்பட்டது. அன்று முன்பதிவு
செய்தவர்கள் தாங்கள் விரும்பும் தேதியில் படம் பார்த்துக் கொள்ளலாம் என்று
தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
விருப்பம் இல்லாதவர்கள் டிக்கெட் தொகையை
திரும்ப பெற்றுக் கொண்டு புதிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும்
கூறுகிறார்கள். வருகிற 23ந் தேதிக்குள் 20 லட்சம் டிக்கெட்டுகள் வரை
விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
Comments
Post a Comment