30th of May 2014
சென்னை::தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக வெற்றிப் பெற்ற
ஜி.வி.பிரகாஷ் குமார், சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம்
'மதயானைக்கூட்டம்' என்ற படத்தை தயாரித்து வெற்றி தயாரிப்பாளராகவும் வலம்
வருகிறார்.
தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், 'பென்சில்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஜி.வி, அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு 'நயன்தாரா இல்லன்னா திரிஷா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக படக்குழுவினர் சென்றபோது, "இதுபோல சமூகத்தில் தெரிந்தவர்களின் பெயரை பட தலைப்பாக வைக்க வேண்டும் என்றால், அவர்களிடன் இருந்து அனுமதி கடிதம் பெற வேண்டும்" என்று தயாரிப்பாளர் சங்கம் கூறி, தலைப்பை பதிவு செய்ய மறுத்துவிட்டது.
இதையடுத்து முதலில் நயன்தாராவை அனுகியபோது, படத்தின் கதையை கேட்டுவிட்டு நயன், சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அடுத்ததாக திரிஷாவிடம் இது குறித்து கூறி, அனுமதி கடிதம் கேட்டுள்ளார்களாம், இதுவரை திரிஷா தரப்பில் எதுவும் சொல்லவில்லையாம், இதனால் தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் திரிஷாவுக்காக காத்திருக்கிறாராம்.

Comments
Post a Comment