- Get link
- X
- Other Apps
31st of May 2014
சென்னை::கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி அமிரா நடிக்க
இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை
முடிவடைந்துவிட்டதாம்.
இன்னும் இரண்டு பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சியும் மட்டும் தான்
பாக்கியாம். இதில் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சியை
புதுச்சேரி அருகே அமைந்துள்ள 100 ஏக்கர் விவசாய நிலத்தில் படமாக்க
திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
இப்படப்பிடிப்பு ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட 15 நாட்கள்
நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து இன்னொரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக
தனுஷ், அமிரா மற்றும் படக் குழுவினர் ஸ்காட்லாந்து பறக்கவிருக்கின்றனர்.
அத்துடன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment