ஐ' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் - விஜய் மில்டன் படம் உறுதியானது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்!!!

5th of May 2014
சென்னை::ஐ' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதரித்தார். ஆனால் அந்தப்படம் சரியாகபோவில்லை. இருப்பினும் அவருக்குள் இருந்த இயக்குநர் ஆசை ஓயவில்லை. பசங்க படத்தில் நடித்த சிறுவர்களை வைத்து 'கோலிசோடா' என்ற படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தயாரிக்கவும் செய்தார். முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி, சிறுவர்களை வைத்தும், தனது கதையை நம்பியும் இப்படத்தை இயக்கினார். ஜனவரி மாதம் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் இந்தாண்டு வெளியான படங்களில் அதிக லாபத்தையும் கொடுத்த படமாகவும் கோலிசோடா இருந்தது.
 
கோலிசோடா படத்திற்கு பிறகு பேசப்படும் இயக்குநரான விஜய் மில்டன் இயக்கத்தில், முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க முன்வந்தனர். அதில் முதல் இடத்தை பிடித்தவர் சீயான் விக்ரம் தான். ஐ படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்கலாம் என்று இருந்த விக்ரமிற்கு, சமீபத்தில் விஜய் மில்டன் சொன்ன கதை பிடித்துப்போக, இப்போது இவர்கள் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக செய்திகள் வெளியான போதும் நேற்று தான் இது உறுதி செய்யப்பட்டது. இதனை விஜய் மில்டனே தெரிவித்தார். மேலும் இப்படத்திற்கு விக்ரம் ஜோடியாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அழகு புயலாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். வருகிற மே 26ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.…

Comments