14th of May 2014
சென்னை::என்றென்றும் புன்னகை படத்தையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம்
ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த
இரண்டு ஆண்டுகளில் அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ஹிட்டானதை முன்வைத்து
சில மேல்தட்டு டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு படையெடுத்தார்.
ஆனால், நயன்தாரா, ஹன்சிகா, அமலாபால், லட்சுமிராய் என்று சென்று கொண்டிருந்த டைரக்டர்கள் த்ரிஷாவை திரும்பிகூட பார்க்கவில்லை. அதனால் வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவர், வேறு வழியில்லாமல் ஒரு கன்னட படத்தில் நடிக்கக்கூட சைன் பண்ணினார். இங்குள்ள மூன்றாம்தட்டு நடிகைகள் வாங்கும் குறைவான படக்கூலிதான் என்றாலும், சும்மா உட்கார்ந்து போரடித்துப்போன த்ரிஷா அந்த படத்தில் நடித்து சில மாதங்களை டைம்பாஸ் செய்தார்.
இந்த நேரத்தில்தான், அவரே எதிர்பாராதவிதமாக செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா போன்றுகூட அந்த படம் அமையலாம் என்று முத்தக்காட்சிகளில் நடிக்கவும் சம்மதம் சொன்னார் த்ரிஷா. ஆனால் சிம்புவுடன் கமிட்டான ராசி இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் த்ரிஷாவுக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது.
Comments
Post a Comment