16th of May 2014
சென்னை::ஹன்ஷிகாவை வைத்து ரொமான்ஸ் பட எடுக்கச் சொன்னால் டைரக்டர்கள் ஈஸியாக எடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு திகில் படம் எடுக்கச் சொன்னால் அது எப்படி சாத்தியமாகும்? அதை ‘அரண்மனை’யில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி
காமெடிப் படம் என்றாலே எக்ஸ்ட்ரீம் லெவல் காமெடிக் காட்சிகளை வைத்து ரசிகர்களின் வயிற்றை வஞ்சகமில்லாமல் பதம் பார்க்கும் சுந்தர்.சி முதல்முறையாக இந்த ஆவி, பேய் ஏரியாவுக்குள் பயமில்லாமல் நுழைந்திருக்கிறார்.
விஷன் ஐ மீடியாஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தர்.சி தான் ஹீரோ. ஹீரோயின்களாக ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என் மூன்று குதிரைகள் நடிக்க இவர்களுடன் சுமார் இரண்டு டஜன் நடிகர், நடிகைகளை நடிக்க வைத்திருக்கும் அவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.
அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அரண்மனையும் ஒரு முக்கிய கேரக்டராக இருக்கும் என்கிறார் சுந்தர்.சி
இதற்காக ஹைதராபாத்திலிலுள்ள மணிக்கொண்டா என்ற இடத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ஒரு அரண்மனை செட்போட்டு படமாக்கியிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் சுமார் 3 மாதங்களாக இரவு பகல் பாராமல் வேலை செய்து உருவாக்கினார்களாம். இந்த அரண்மனையில் தான் ஹன்ஷிகாவை பல மாதங்களாக அடைத்து வைத்து நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர்.சி
ஃபேமிலி, த்ரில்லர் படம் என்றாலும் படத்தில் சுந்தர்.சியுடன் வினய்யும், சந்தானமும் இருப்பதால் சுந்தர்.சியின் கள ஏரியாவான ஹை லெவல் காமெடியும் படத்தில் உண்டாம்.
அதானே… அது இல்லேன்னே அது எப்படி சுந்தர்.சி படமாகும்?..
Comments
Post a Comment