13th of May 2014
சென்னை::அமலாபால்-விஜய் திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் அமலா பால்.டைரக்டர் விஜய், அமலா பால் காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அமலா பால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எனவே விஜய்யையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபால் தரப்பில் கேட்டனர். அதற்கு விஜய் மறுத்துவிட்டார்.
இருவரின் திருமணம் குறித்து இரு குடும்பத்தாரும் பேசி வந்தனர். திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி கொச்சியில் செயின்ட் ஜுட் சர்ச்சில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள், நண்பர்களுக்கு நெடும்பசேரியில் உள்ள அரங்கில் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. இதுபற்றி அமலா பால் அம்மா கூறும்போது,‘சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் வரும் ஜூன் 12ம் தேதி திருமணம் நடக்கிறது.
தமிழ் திரையுலகினர் இதில் கலந்து கொள்கின்றனர்‘ என்றார். அமலாபால் தற்போது திருவனந்தபுரத்தில் ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் நடந்துவரும் மலையாள பட ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். இதையடுத்து மோகன்லாலுடன் ‘லைலா ஓ லைலா‘ என்ற படத்தில் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு அமலா பால் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. தற்போது மனதை மாற்றிக்கொண்ட அமலாபால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்...
Comments
Post a Comment