பிரசன்னா- சினேகா இருவரும் மீண்டும் ஜோடி கிரிமினல் சைக்கோ!!!

3rd of May 2014
சென்னை::அருண் வைத்தியநாதன் இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோதுதான், பிரசன்னா-சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இணைந்து நடிக்காதபோதும், அவர்களுக்கிடையிலான காதல் வளர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால், காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ரொம்ப சீக்ரெட்டாக வைத்திருந்தனர். சில நடிகர்-நடிகைகளைப்போன்று ஹோட்டல், பார்ட்டி என்றெல்லாம் அவர்கள் ஊர் சுற்றாததால் அவர்களது காதல் வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்து வந்தது.
 
ஆனால், ஒரு கட்டத்தில் தாங்கள் திருமணம் செய்து கொள்ள தயாரானபோது அவர்களே தாங்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொன்னார்கள். ஆக அவர்களது உறுதியான காதல் கல்யாண பந்தத்திலும் இணைந்து விட்டது. இப்போது நட்சத்திர தம்பதிகளாக பிரசன்னா- சினேகா இருவரும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில், தங்களை தொடர்ந்து சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கேம் செஞ்சர் எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு பட நிறுவனம் தொடங்கியுள்ளனர். அதன் சார்பாக டோனாவூர் ராதா என்றொரு படத்தை தயாரித்து அதில் பிரசன்னா- சினேகா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
 
அதோடு, தங்கள் காதலுக்கு வித்திட்டவரான இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கும் தங்கள் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க சான்ஸ் கொடுத்துள்ளனர். அந்த படத்தில் சினேகா நடிக்கவில்லையாம். பிரசன்னா ஹீரோவாக நடிக்க, இன்னொரு நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்..

Comments